கார்த்தியின் அடுத்த படம் கைதி! ரிலீஸ்க்கு ரெடி! எப்போ தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் தான் கைதி.


இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் சார்பில் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ் .ஆர். பிரபு  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான் கைதி . 

இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கைதியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் திரைப்படத்திற்கான பின்னணி இசை பணியில் திரைப்படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். திரைப்படத்திற்கான இசையை சாம் சி எஸ் அமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சார்ஜ் நரேன் தலை வாசல் விஜய் , ரமணா, பொன்வண்ணன், மற்றும் யோகிபாபு போன்றோரும் நடித்துள்ளனர்.இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி திரையிடப்படும் என திரைப்பட குழுவினர் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கைதி திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின. அந்த புகைப்படத்தில் நடிகர் கார்த்தி மிகுந்த கோபத்துடன் காட்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.