ரஜினிகாந்த் எப்போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்..! கே.எஸ்.அழகிரி அதிரடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.எஸ்.அழகிரி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் பல தரப்பட்ட கேள்விகள் எழுப்பப் பட்டது. அரசியல் சார்ந்த பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருவது குறித்து சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என அதிரடியாக கூறினார். ஏனெனில் ரஜினிகாந்துக்கு ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் இருப்பதாக கூறினார்.

ஒருவேளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கினாலும் அதில் தமிழருவி மணியன் இருக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி அவர்கள் பேசிய இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .மேலும் அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.