ஜியோவில் இனி அவுட் கோயிங் கால்கள் இலவசம் இல்லை! புதிய கட்டணத்தை அறிவித்தார் அம்பானி!

அவுட்கோயிங் கால்களுக்கு இனி பைசா வசூலிக்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜியோ நிறுவனமானது டெலிகாம் சேவைகளுக்குள் அடியெடுத்து வைத்தது. தொடக்கத்தில் இலவச அவுட்கோயிங் கால்கள், அதிக டேட்டா போன்றவற்றை குறைந்தளவான பணத்தில் அறிமுகப்படுத்தியது. இதனால் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் பெரிதும் வீழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ஜியோவின் இலவச வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜியோ நிறுவனம் இன்டர்கனெக்ட் யுசேஜ் சார்ஜ் (interconnect usage charges) என்பதற்காக 13,500 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.

இதனை ஈடுகட்டும் வகையில் தற்போது ஜியோ அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஜியோவிலிருந்து வேறொரு நெட்வொர்க்க்கு அழைப்பு விடுக்கும் போது, ஒரு நிமிடத்திற்கு 6 பைசா அவுட்கோயிங் சார்ஜஸ் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த ரூபாய்க்கு ஏற்றவாறு அதிக டேட்டா அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 3 வருடங்களாக இலவசமாக பேசி வந்த ஜீவா வாடிக்கையாளர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

இந்த அறிவிப்புக்குப் பின்னர் எப்படி ஜியோ நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது என்பது குறித்து வல்லுனர்கள் யோசித்து வருகின்றனர்.