பிரபல நடிகையாக இருந்த ஜெயப்பிரதா, தான் தற்கொலை முடிவை எடுத்ததாக தற்போது கூறி அதிர வைத்துள்ளார்.
ஆபாசப்படம் வெளியான விவகாரம்! பிரபல நடிகை தற்கொலை முயற்சி!

ஆந்திர மாநிலம்
ராஜமுந்திரியை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார்.
தமிழில் மன்மதலீலை தொடங்கி சலங்கை ஒலி,
தசாவதாரம் ஆகிய படங்களிலும் ஜெயப்பிரதா நடித்துள்ளார். திரைத்துறையில்
உச்சத்தில் இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சியில் இவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து எம்பியாக இவர் இருமுறை பதவி வகித்தார்.
இந்த நிலையில் அண்மையில் ஜெயப்பிரதாவை செய்தி
நிறுவனம் ஒன்று பேட்டி கண்டது. அப்போது தம் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை
அவர் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடைய ஆலோசகரான அரசியல்வாதி அமர்சிங்குடன்
தன்னை இணைத்து வெளியான புகைப்படங்களைப் பற்றி ஜெயப்பிரதா பகிர்ந்து கொண்டார். சில
ஆண்டுகளுக்கு முன் தன்னையும் அமர்சிங்கையும் இணைத்து மார்பிங் செய்யப்பட்ட
புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக ஜெயப்பிரதா கூறினார்.
அந்த சமயத்தில் தான் தொடர்ந்து அழுது கொண்டே
இருந்ததாகவும் வாழவே விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். யாருமே
தனக்கு ஆதரவு அளிக்காததால் தற்கொலை செய்யவும் முடிவெடுத்ததாக ஜெயப்பிரதா திடுக்கிடும்
தகவலை வெளியிட்டார்.
அமர்சிங்கை சகோதரர் என எண்ணி ராக்கி கயிறு
கட்டிய போதும் பலரும் தன்னை கேலி கிண்டல் செய்ததாகவும் அவர் வருத்தம்
தெரிவித்தார். மேலும் சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக உள்ள ஆசம் கான்
தன்மீது அமிலம் பேசுவதற்கு முயற்சி செய்ததாகவும் ஜெயப்பிரதா குறிப்பிட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்
சமாஜ்வாடி கட்சி சார்பில் ஜெயப்பிரதா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அமர்சிங்குடனான நெருக்கத்தை பயன்படுத்தி ஜெயப்பிரதா இந்த வாய்ப்பை பெற்றதாக
கூறப்படுகிறது.
ஆனால் ஜெயப்பிரதாச சமாஜ்வாடி சார்பில்
போட்டியிடுவதை அதே கட்சியின் முக்கிய தலைவரான அசம் கான் விரும்பவில்லை. இதனால்
2009ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஜெயப்பிரதாச அமர்சிங்குடன் நெருக்கமாக இருக்கும்
புகைப்படங்கள் வெளியாகின.
மேலும் ஜெயப்பிரதாவின் நிர்வாண
புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. இதன் பின்னணியில் அசம் கான் இருப்பதாக ஜெயப்பிரதா
அப்போதே கூறினார். இவ்வளவையும் மீறி ஜெயப்பிரதா தேர்தலில் வென்று எம்.பி ஆனார்.