காதலுக்காக தமிழச்சியாக மாறிய ஜப்பான் பெண்! கும்பகோணத்தை குலுக்கிய திருமணம்! காண்போர் நெகிழ்ச்சி!

கும்பகோணத்தை சேர்ந்த இளைஞரை ஜப்பான் பெண் தமிழக முறைப்படி திருமணம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


கும்பகோணத்தில் மோதிலால் தெரு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்க வசந்தன் என்பவர் வசித்து வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சிக்கு சென்றார். அப்போது அவருக்கு அந்நாட்டு வழக்கறிஞரான மேகுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

முகநூல் வழியில் ஏற்பட்ட நட்பானது காதலாக மாறியது. இவர்களுடைய காதலை இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டனர். இரு வீட்டாரின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு தமிழ் கலாச்சாரப்படி இன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது. 

மேகுமியின் பெற்றோரால் வர இயலாத காரணத்தினால் அவருடைய தாய் மாமன் பெண்வீட்டாரின் சடங்குகளை செய்தார். மணமகள் சார்பாக அவருடைய தங்கை மற்றும் பிற உறவினர்கள் மண்டபத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் கலாச்சாரப்படி உடையணிந்திருந்தனர்.

இந்த சம்பவமானது கும்பகோணத்தில் அனைவரையும் நெகிழ வைத்தது.