சென்னை VR மால் PVR திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இலவச காட்சி! அசர வைக்கும் அறிவிப்பு!

சென்னையில் ஜப்பான் 2019 திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.


சென்னையில் இந்த ஆண்டிற்கான ஜப்பான் திரைப்பட விழா கோலாகலமாக துவங்கவுள்ளது. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் சார்பில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஜப்பான் திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியில் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது இதற்கான கால அட்டவணையும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜப்பானியர்களுக்ககும்  தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவு ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை அள்ளி தந்தவர்கள் ஜப்பானிய மக்கள். அதேபோல் இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமானின் இசையில் வெளிவந்த பல பாடல்களை ஜப்பானிய மக்கள் இன்றளவும் பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருப்பது வழக்கம்.   இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஜப்பான் திரைப்பட விழாவை கொண்டாடும் நோக்கில் ஜப்பான் நாட்டு திரைப்படங்களை நம்முடைய தமிழ்நாட்டில் இலவசமாக திரையிடப் போகிறார்கள். 

சென்னை அண்ணாநகரில் உள்ள VR மாலில் அமைந்திருக்கும் PVR திரையரங்கில் இந்த ஜப்பானிய திரைப்படம் வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலவசமாக திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை திரைப்படம் திரையிடப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக வினியோகிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக திரையிடப்பட போகிற அனைத்து ஜப்பானிய திரைப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் எந்த நேரத்தில் எந்த திரைப்படம் திரையிடப்படும் என்ற கால் அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.