மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும்..! இந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி பிரார்த்தனை செய்யும் இஸ்லாமிய இளம் பெண்..!

அடுத்த முறையும் நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும் என்று இஸ்லாமிய பெண்ணொருவர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வரும் சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு இஸ்லாமிய பெண்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதன்படி இஸ்லாமிய பெண்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர். 

இதனிடையே இஸ்லாமிய பெண்ணொருவர் கோவில் கோவிலாக சென்று அடுத்த முறையும் நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும் என்று வேண்டி கொள்வதாக கூறப்படுகிறது. அதாவது ஜகதாம்பா கோவிலுக்கு என்று அந்த இஸ்லாமிய பெண் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று வேண்டி கொண்டுள்ளார்.

ராமருக்கு உகந்த "ராம நவமி" நன்னாளன்று அந்த இளம்பெண் வித்தியாச்சலில் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். "மாதா ராணி இந்தியாவை விட்டு கொரோனா வைரஸ் நோய் ஓட வேண்டும். 2029-ஆம் ஆண்டுவரை நரேந்திர மோடி அவர்கள் மெஜாரிட்டியுடன் பிரதமராக இருக்க வேண்டும்" என்ற முழக்கங்களை எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.