தாயை போல் மகள்! அடுத்தவர் கணவன் மீது ஆசைப்படும் ஸ்ரீதேவி மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவூட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.


இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க  இருக்கிறார்.  இன்னும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை.  இந்த படத்தின் பெயர் " ரூ ஆஃபிசா". இந்த திரைப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூருக்கு ஜோடியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை அறிந்த இஷான் காதர், ராஜ்குமார் ராவிற்கு முன்னெச்சரிக்கையாக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.  இஷான் காதர் ஏற்கனவே  ஜான்வி கபூர் உடன் இணைந்து "தடக் " என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இவர்கள் இருவரும் டேட்டிங் இல் ஈடுபட்டதாகவும் பல செய்திகள் பரவின.

இஷானுக்கு ஏற்கனவே ஜான்வி கபூருடன் இணைந்து நடித்த அனுபவம் இருப்பதால், ராஜ்குமார் ராவிற்கு சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார். "ராஜ்குமார், ஜான்வி கபூரிடம் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கற்றுக்கொள்வதில்  சிறந்த ஆர்வமுள்ளவர் என்றும், அவர் எப்போதும் அவரது பணியில் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் செயல்படும் ஆற்றலை கொண்டவர் என்றும் கூறினார்".

மேலும் ராஜ்குமார் ராவ் உங்கள் மீது ஜான்விக்கு மிகவும் மோகம் உண்டு. இதை அவர் என்னிடம் அடிக்கடி கூறியுள்ளார். எனவே அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இஷான் கூறியுள்ளார். இதற்கிடையே ஸ்ரீதேவியும் கூட திருமணம் ஆன போனி கபூரைத்தான் காதலித்து திருமணம் செய்தார்.

இதே போல் அவரது மகள் ஜான்வியும் கூட ஏற்கனவே திருமணமான நடிகர் மீது மோகத்தில் சுற்றுவது தாயை போல் மகள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.