மத்திய அரசின் செப்டம்பர் மாத அன்லாக் அறிவிப்பு இவ்வளவுதானா..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் செப்டமர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அதன்படி, இந்தியாவில் செப்டம்பர் 30 வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. 

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாத இடங்களில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கலாம். கட்டாயம் கிடையாது.

மேலும் நீச்சல் குளம், திரையரங்குகள் செயல்படுவதற்கும் அனுமதி கிடையாது. திறந்த வெளி திரையரங்கம் செப்டம்பர் 21-ம் தேதி முதல் செயல்பட அனுமதி உண்டு.

மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை. செப்டம்பர் 21-ம் தேதி முதல் பொதுக்கூட்டங்கள், கலாசார நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி உண்டு. 

நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கூடாது, உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.