நம்ம செங்கோட்டையன் துறையிலும் இப்படியா நடக்கிறது..? மகன் நிறுவனத்திற்கு ஆர்டர் மேல் ஆர்டர்.

பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தி இருந்த நிலையில், செங்கோட்டையன் முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பல்வேறு பாலிடிக்ஸ் காரணமாக எடப்பாடி முன்னேறினார்.


அதிருப்தியுடன் அமைச்சரவையில் தொடர்ந்தாலும், பண விவகாரங்களில் சிக்காதவர் என்ற பெயர் செங்கோட்டையனுக்கு இருந்துவந்தது. இந்த நிலையில், அவர் துறையில் நடக்கும் ஊழல் விவகாரங்களில் செங்கோட்டையனுக்கும் தொடர்பு இருப்பதாக முதல்வருக்கே மனு சென்றுள்ளது.

ஆம், இப்போது நீட் பயிற்சியை அளிக்கும் இ- பாக்ஸ் நிறுவனம், அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர் மற்றும் அவருடைய வகுப்புத் தோழர் பிரதீப் கூட்டணியில் நடத்தப்படுவது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை புரமோட் செய்யும் வகையில் தான் ஒவ்வொரு பேட்டியிலும் e-box e-box என்று அமைச்சர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்...

இப்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கணினி சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்டவற்றை இ பாக்ஸ் நிறுவனம் நடத்துகிறது

கோவை மாவட்டம் பி.என் பாளையத்தை முகவரியாக கொண்டு செயல்பட்டு வருகின்றது அம்பிஸாப்ட் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம் ... இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் என்பவர் ஆவார் இந்த நிறுவனம் செயல்படும் அதே முகவரியில் தான் இ பாக்ஸ் மற்றும் இ பாக்ஸ் காலேஜஸ் என்ற இரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது..

இதில் இ பாக்ஸ் நிறுவனம்தான் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அளித்து வருகின்றது... மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் இ பாக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார்  

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆன்லைன் ரீதியான பயிற்சிகளுக்கு இ-பாக்ஸ் நிறுவனத்தை கொண்டுவருவதற்கான காரணத்தை அலசிய போது சில விவரங்கள் தெரிய வந்துள்ளன... அதன்படி அம்பிஸாப்ட் சாப்ட் டெக்னாலஜியின் நிறுவனர் பிரதீப்குமாரும் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிரும் நண்பர்கள் என்று கூறப்படுகின்றது... இருவருக்கும் உள்ளான நட்பை தாண்டி சில விவகாரங்கள் இருக்கின்றன...

அதன்படி e-box காலேஜஸ் என்கிற பெயரில் செயல்படும் நிறுவனம் தற்போது தனியார் கல்லூரிகளை அதன் கீழ் கொண்டு வந்து முழுக்க முழுக்க நிர்வாகம் செய்யும் பணியினை துவங்கி இருக்கின்றது அதன்படி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.

அதாவது முழுக்க முழுக்க தங்களின் சொந்த கல்லூரிபோல் இ.பாக்ஸ் காலேஜஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரிகளை நடத்தி வருகின்றது முதற்கட்டமாக கோவையில் 2 பொறியியல் கல்லூரிகள் மற்றும் சேலத்தில் ஒரு பொறியியல் கல்லூரியை e-box காலேஜஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது...

அவ்வாறு கோவையில் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கல்லூரிதான் கதிர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி ஆகும்.. கதிர் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி அமைச்சர் செங்கோட்டையன் மகன் கதிருக்கு சொந்தமானது ஆகும். இந்த தொடர்புகளை நாம் கவனிக்கின்ற போது அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இ பாக்ஸ் நிறுவனத்தை முழு மூச்சாக ஆதரிக்கிறார் என்பது விளங்கும்.

எந்த டெண்டரும் கொடுக்காமல் இ பாக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று முதல்வருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.