பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் மீரா மிதுனை தட்டித் தூக்கிய ஹீரோ! புதுப்படத்தில் புது ஜோடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான மீரா மிதுன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தமிழில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 16-வது போட்டியாளராக மீராமிதுன் கலந்து கொண்டார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆஃப் சவுத், ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இதனிடையே இவர் சமீபத்தில் ஒரு மோசடி வழக்கில் சிக்கினார்.

இதனால் இவர் என்ற அழகி பட்டங்கள் பறிக்கப்பட்டன. இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். அனைவருடனும் சண்டை போட்டு கொண்டு அகந்தையாக செயல்பட்டு வந்தார்.

இறுதியாக சம்பந்தமே இல்லாமல் சேரனுடன் சண்டை போட்டதால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மாடலிங் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் மீராவுக்கு மகிழ்ச்சியான செய்தி சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து "அக்னி சிறகுகள்" என்னும் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுனும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் மீராவை வெள்ளித்திரையிலும் பார்க்க முடியும் என்று அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர்.