மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் தேர்வில் ஜாதி அரசியல்! அம்பலமான உண்மை!

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளராக பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளரை கெளரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நினைத்தால், விவகாரமே வேறு என்று சொல்கிறார்கள்.

மதுரையில் அதிக எண்ணிக்கையில் நாயக்கர்கள், செளராஷ்டிரா மக்கள் மற்றும் கள்ளர் இனத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஓட்டுக்களை கவர்வதற்குத்தான் சு.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். ஏனென்றால் வெங்கடேசன் நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர். வெங்கடேசனின் மனைவியோ செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவராம்.

இரண்டு குலத்து மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்தால் மிக எளிதில் சு.வெங்கடேசன் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டுத்தான் அவரை தேர்வு செய்தார்களாம். இதுவெல்லாம் போதாது என்று இவரது காவல் கோட்டம் கதையானது பிறமலைக் கள்ளர் சமூகத்தைப் பற்றிய நாவல் ஆகும். 

ஆக, ஒரே கல்லில் மூன்று மாங்காயும் அடிக்க முடியும் என்ற நல்ல நோக்கத்தில்தான் வெங்கடேசனை செஞ்சட்டைத் தோழர்கள் மதுரையில் நிறுத்தி வைத்துள்ளார்களாம். அழகிரியின் அட்டகாசம் மட்டும் இல்லையென்றால் எளிதாகவே வெற்றி பெறுவார்கள் எனத் தெரிகிறது.