ஆண்ட பரம்பரை அரசிடம் மண்டியிடுவது சரியா..?

அசுரனுக்கு குரல் கொடுக்கும் விடுதலை சிறுத்தைகள் ஜாதிக் கொடுமைக்கு எதிராக எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் இப்போது பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது.


வசனங்களை நீக்கவேண்டும் என்று சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக ஆண்ட பரம்பரை என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

திரைப்படத்தில் வரும் அந்த ஒற்றை வசனத்தை மட்டும் நீக்க வேண்டும் என்று ஆப்பநாட்டிலிருந்தும் பாண்டிய நாட்டிலிருந்தும் ஒரே அன்பு மிரட்டல்கள் இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன.

அது என்ன தான் வசனம்? “ஆண்ட பரம்பரைன்னு சொல்றீங்க, எங்க காட்ட எழுதி வாங்கிறீங்க”

அவ்வளவுதாங்க அந்த வசனம். இதுல என்ன தவறு இருக்குன்னு தெரியல.

நாங்க ஆண்ட பரம்பரைன்னு ஒரு பக்கம் மீசைய முறுக்கிட்டு, மறுபக்கம் பிற்படுத்தப்பட்டோர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோருன்னு அரசின் சலுகைக்காக அரசிடம் மண்டியிடுவது மட்டும் சரியா?

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறிப்பிட்ட வகையறாக்களிடம் மட்டும் எப்படி வந்தது? சமஸ்தானங்கள், சிற்றரசர்களிடமிருந்த கோவில் நிலங்கள் பார்பணர்களிடம் எப்படி கைமாறின? மீதமுள்ள விவசாய நிலங்கள் ஆண்ட பரம்பரைன்னு பீத்திக்கொள்ளும் சமுதாயத்திடம்

எப்படி வந்தது? அந்த வரலாற்றின் உண்மையை இந்த ஆண்ட பரம்பரைகள் மறு வாசிப்பு செய்தால் நல்லது என்று பதிவு செய்திருக்கிறார் வன்னி அரசு.