சென்னை கோட்டை கொடிமரம் சல்யூட் அடிக்க தகுதியானதா? அடிமை வியாபாரியின் அவமானச் சின்னம் அது! அந்த கதை இதுதான்!

சென்னை கோட்டையில் இருக்கும் கொடிமரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று நமது முதல்வர்கள் கொடியேற்றி சல்யுட் அடிப்பதைப் பார்க்கிறோம்.


இந்தக் கொடிமரம் ஒரு அவமானச்சின்னம்.இந்தியர்களுக்கு,குறிப்பாக தமிழர்களுக்கு பெரும் கொடுமைகளை செய்த ஒருவன் நட்ட கொடிமரம் என்பது வரலாற்றின் பக்கங்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தும் நமது ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமலே இருக்கிறார்கள்.

அந்தக் கொடிமரத்தை நட்டவன் பெயர் எலிஹு யேல்.அப்போது இந்தியாவைப் போலவே இங்கிலாந்திடம் அடிமை பட்டுக்கிடந்த அமெரிக்காவில் இருந்து வியாபாரியாகச் சென்னை வந்தவன் எலிஹு யேல்.

இவன் 1687 ஜூலை 25 முதல்,1692 அக்டோபர் 3 ம் தேதிவரை சென்னை கோட்டையில் கவர்னராக இருந்தான்.அந்த காலகட்டத்தில் சென்னை,புலிகட் ( இன்றைய பழவேற்காடு) பாண்டிச்சேரி துறைமுகங்களில் இருந்து ஏழை தமிழர்களை கப்பலில் கொண்டுபோய் மேற்குலகு எங்கும் அடிமையாக விற்று செல்வம் ஈட்டி இருக்கிறான் எலிஹூ யேல்.

அப்படி சேர்த்த செல்வத்தில் இருந்து அமெரிக்காவில் இருந்த ஒரு கல்லூரிக்கு ஒன்பது பொதிகளில் பொருட்கள்,411 புத்தகங்கள்,முதலாம் ஜார்ஜின் ஒரு ஓவியம்  போன்றவற்றை பரிசளித்திருக்கிறான்.

அந்த பரிசுகளின் அன்றைய மதிப்பு 800 பவுண்ட்.அந்த கல்லூரி வளர்ந்து அமெரிக்காவின் முன்னணி பல்கலையான போது அதற்கு இவனது பெயரையே சூட்டி ' யேல்' பல்கலைக்கழகம் என்று அழைத்தனர்.இந்தப்பல்கலைக் கழகம்தான் அறிஞர் அண்ணாவுக்கு டாக்கடர் பட்டம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது யேல் ஒருமை அடிமை வியாபாரி என்பதற்கான உறுதியான ஆவணங்கள் கிடைத்து விட்டதால்,யேல் பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றவேண்டும் என்கிற குரல் அமெரிக்காவில் வலுத்து வருக்கிறது.அப்படிப்பட்ட ஒரு அடிமை வியாபாரியின் கையால் நட்ட கொடிக்கப்பத்தில் சுதந்திர இந்தியாவின் கொடியை பறக்க விடலாமா?.அதை அகற்ற இந்த அரசு முன்வருமா.