குளிர் பிரதேச ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகைக்கு நல்லதாம் ??

ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய பழம். மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. இதனை சமைக்காமல் அப்படியே சாப்பிடமுடியும் என்பதால் உலகெங்கும் ஆப்பிள் பழத்துக்கு மதிப்பு உண்டு.


ஆப்பிள் பழத்தில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் அதிகம் விளைகிறது. இப்போது குளிர் காலம் மற்றும் வெயில் காலங்களிலும் கிடைக்குமாறு பயரிடப்படுகிறது.

·         ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன.

·         ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராகிறது.

·         தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு.

·         உடல் எடை குறைய விரும்புபவர்களும், நரம்புக் குறைபாடு உள்ளவர்களும் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மிகுந்த பலன் தரும்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்கும் நிலைமை வராது என்று சொல்லப்படுவது உண்மை எனும் அளவுக்கு ஏராளமான சத்துக்களை கொண்டது.