நெல்லையில் ஒரு பெல்ஜியம்..! நோபல் பரிசு பெற்றவரால் உருவான வரலாறு..! தெற்கத்தி மக்களை வியப்படைய வைக்கும் தகவல்கள்!

திருநெல்வேலியிலுள்ள ஒரு பகுதி பெல்ஜியம் என்று அழைக்கப்படுவதன் பிண்ணனியை இந்த செய்தியில் பகிர்வோம்.


திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் அமைந்துள்ளது. இங்கு களக்காடு எனும் பகுதிக்கு அருகேயுள்ள ஒரு சிறிய ஊரின் பெயர் பெல்ஜியம்.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் டொமினிக் பியர். இவர் 2-ஆம் உலகப்போரின் போது காயமடைந்த, உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட வீரர்களின் நல்வாழ்வு மையத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பல உலக நாடுகளிலிடமிருந்து சிரமப்பட்டு நிதி திரட்டி போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார். இதற்காக 1958-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

களக்காடு பகுதிக்கு அருகே 54 ஏக்கர் அளவில் அமைதி பூங்காவை டோமினிக் வடிவமைத்தார். வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில் அங்கு வேளாண்மை தொழிலை ஏற்படுத்தினார். மறைந்த இந்தியாவின் இயற்கை மருத்துவரான நம்மாழ்வார் 5 ஆண்டுகளுக்கு இந்த அமைதி பூங்காவில் பணியாற்றியுள்ளார். 

பெரியம்மை நோயால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது டோமினிக் பெல்ஜியம் நாட்டிலிருந்து 5 மருத்துவ குழந்தைகளை வரவழைத்து கிராமம் கிராமமாக மருத்துவ பணிகளில் ஈடுபட செய்தார். பிரிடா மோனியர் என்ற இலவச மருத்துவமனையை கட்டியமைத்தார். 

அப்போதிலிருந்து சுற்றுவட்டார கிராம மக்களால் இந்த  மருத்துவமனை "பெல்ஜியம் மருத்துவமனை" என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனால்தான் இந்த ஊர் பெல்ஜியம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையில் வெறும் 2 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும், மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மாறும், வேறு சில வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் டோமினிக் கட்டியமைத்த அமைதி பூங்காவை சீரமைத்து தருமாறும் மக்கள் கேட்டுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசாங்கம் விரைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.