சுந்தர் பிச்சை சம்பளம் கிடுகிடு உயர்வு..! இனி ரூ.1700 கோடியாம்..! மிரள வைக்கும் காரணம்!

கூகுள் மற்றும் அல்பபெட் சிஇஓ-ஆன சுந்தர் பிச்சைக்கு ஆண்டு வருவாய் பற்றி அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


2004-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டூல்பார் போன்ற கூகுள் சேலைக்கு தேவையான நுட்பங்களை உருவாக்கிய குழுவுக்கு சுந்தர் பிச்சை தலைமை தாங்கினார்.

2015-ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்ற அவர், கூகுளின் சிஇஓ-ஆக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அன்மையில் கூகுளின் தாய் நிறுவனமான அல்பெபட்டுக்கு சிஇஓ-வாக பொறுப்பெற்றார்.

இதனிடையே ஆல்பபெட் நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்திற்கு சுந்தர்பிச்சையின் வருவாயை தாக்கல் செய்துள்ளது. அதன்படி 2020 புத்தாண்டிற்கு பிறகு ஆண்டொன்றிற்கு சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் வருட சம்பளமும், 240 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குச்சந்தைகளும் வழங்கப்படும் என்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி மொத்த வருவாயான 242 மில்லியன் டாலர்கள் அடுத்த வருடத்திலிருந்து அவருக்கு கிடைக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பானது 1700 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.