சத்யராஜின் மகள் உண்மையான ஊட்டச்சத்து நிபுணர்தானா..?

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் முதல்வர் எடட்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


அந்த கடிதத்தில், ’கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க பள்ளிகளில் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 40 சதவீத பெண்களுக்கும், 38 சதவீத ஆண் பிள்ளைகளுக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்ததை கண்டறிந்தோம். 

அதனால் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். காரணம் இரும்புச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதன் மூலம் கொரோனா வர வாய்ப்பு அதிகம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தி வெளியானதும், திவ்யா உண்மையாகவே ஊட்டச்சத்து நிபுணர் படிப்பு படித்தவரா அல்லது மூன்று மாத சர்டிஃபிகேட் கோர்ஸ் முடித்துவிட்டு இப்படி பேர் வாங்குவதற்காக அரசுக்கு கடிதம் எழுதுகிறாரா என்று பல்வேறு பதிவுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

நல்லதை யார் சொன்னால்தான் என்ன? எதுக்கும் உங்க சர்ட்ஃபிகேட்டை போஸ்ட் பண்ணுங்க திவ்யா.