டிரெஸ்க்கு மோடி இவ்ளோ ரூபாய் செலவு செய்கிறாரா..?

மோடியின் உடைகளுக்காக மட்டுமே மாதம் 40 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஒரு முறை போட்ட உடையை திருப்பி போடுவதாகவும் தெரியவில்லை. இது அரசு செலவில் நடக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுகிறது.


மோடி ஒரு நாளைக்கு 3 முறை தனது உடையை மாற்றுகிறார், ஒரு மாதத்திற்கு 90 சூட்கள், அவர் அணியும் சூட் 50,000 முதல் 1 லட்சம் வரை இருக்கும்... அவருடைய சம்பளம் ரூ.1.5 லட்சம் தான்... ஆக, அவருக்கு உடைகள் வாங்கி தருவது யார்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மோடியின் உடைகளுக்காக மட்டுமே மாதம் 40 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஒரு முறை போட்ட உடையை திருப்பி போடுவதாகவும் தெரியவில்லை. இது அரசு செலவில் நடக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுகிறது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல் படி மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம் ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19 ஆண்டில் ரூ.11.14 லட்சமாக இருந்த பிரதமரின் வருமானம், 2022-23-ல் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது

கடந்த மக்களவைத் தேர்தல்களின்போது பிரதமர் தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மொத்த வருமானமும் இந்த முறை அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என்றும், 2014-ம் ஆண்டு ரூ.1.66 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தனக்கு சொந்தமாக எந்த நிலமும், பங்குகளும், மியூச்சுல் ஃபண்ட் முதலீடும் இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரமாண பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவி என்ன வேலை செய்கிறார் என்பதும், அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். தான் அரசு சம்பளம் மற்றும் வங்கியின் வட்டியில் இருந்து வருமானம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.