ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடக்கம்! இறுதிப்போட்டி எப்போது எங்கு தெரியுமா?

ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


13 வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலம் மற்றும் மற்ற பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஆரம்ப தேதி மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் எனவும் இறுதிப்போட்டி மே மாதம் 24 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதுடெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போட்டிகளை தொடங்குவதற்கான நேரங்களை மாற்றியமைப்பதற்கான விவாதம் நடைபெற்றது. 

ஆனால் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல இரவு 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஐபிஎல் போட்டிகள் பல நாட்களில் மாலை மற்றும் இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறும். இந்த முறை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் மிக குறைந்த நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.