தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களில் இருந்து பெறப்படும் விதைகளே கசகசா. அபின் செடியில் இருந்து விளைவதால், இதனை போதைப்பொருள் போன்று விமான நிலையங்களில் அனுமதிக்க மாட்டார்கள்.


மிகவும் குறைந்த அளவில் உணவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கசகசா வெப்பத்தன்மை உடையது ஆகும்.

·         கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவர உடலில் பலம் உண்டாகும், மெலிந்த உடல் தேறும்.

·         கசகசாவை வாயில் மென்று துப்பினால் வாய்ப்புண், தொண்டைக் கமறலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

·         கசகசா சேர்க்கப்பட்ட உணவினால் ஜீரண சக்தி உண்டாகும். வயிற்றுப் புண், வயிறு குறைபாடுகள் நீங்கும்.

·         உடலுக்கு சுறுசுறுப்பும், நரம்புகளுக்கு பலமும், மூளைக்கு விறுவிறுப்பும் தரும் தன்மை கசகசாவிற்கு உண்டு.

அழகுப் பொருளாக பயன்படுத்தப்படும் கசகசாவில் எவ்விதமான போதைத்தன்மையும் இல்லை என்றாலும் குறைந்த அளவு எடுத்துக்கொள்வதே போதுமானது.