இனி இன்போசிஸ் நிறுவனத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது..! நந்தன் நிலகேனி போட்ட பகீர் குண்டு!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டால் தான் அவமதிக்கப்பட்டதாக நந்தன் நிலகேனி கூறினார்.


விசில் ஃபோலவர் குழு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. தற்போது இந்த குற்றச்சாட்டை குறித்து பேசிய நந்தன் நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்தின் மீது சாட்டப்பட்ட குற்றம் அனைத்தும் பொய்யானவை என்றும் அவை தன்னை அவமதிப்பதாக உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

ஐடி மேஜரின் நிர்வாகம் மற்ற தலைவரான நந்தன் நிலகேனி பேசுகையில், இன்போசிஸின் எண்ணிக்கையை கடவுளால் கூட மாற்ற முடியாது. உங்களிடம் சிறந்த நிதி குழு இருக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார். அறிக்கைகளுக்கு மாறாக, நிறுவனம் புகார்களுக்கு பொறுப்புடன் பதிலளித்ததாகவும், பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் கடந்தகால நடைமுறைகளுக்கு இணங்குவதாகவும் நிலேகனி கூறினார். 

மேலும் பேசிய அவர் நிறுவனத்தின் ஒப்பந்தம் இல்லை எப்போதும் போல நல்ல நிலையில்தான் இருக்கிறது. நாங்கள் விரைவாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறோம், வாடிக்கையாளர்கள் எங்களை நம்புகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் நாங்கள் கையாண்டு வருகிறோம் என்று கூறினார்.

பின்னர் பேசிய அவர் விசில் ஃபோலவர் குழு, சாட்டப்பட்ட கூற்றம் விசாரணையில் உறுதியானால் நிச்சயம் நாங்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம். இன்போசிஸ் மிக உயர்ந்த கார்ப்பரேட் ஆளுகை தரங்களை வரையறுத்து பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. 

இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப் போவதாக வெளியான தகவல் ஊகங்கள் தான் என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ யு.பி. பிரவீன் ராவ் தற்போது கூறியிருக்கிறார். ஊழியர்களை மறுசீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் நிறைய முதலீடு செய்துள்ளோம். பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது எங்களுடைய நோக்கம் அல்ல என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.