கடவுள் இருக்கிறார்! முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

சிவகாசி மாவட்டத்தில் சின்னஞ்சிறு குழந்தையை மீட்டெடுத்துள்ளது. சமீபத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நிகழ்ந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.


சிவகாசியில் மாறனேரி என்ற பகுதியின் ரயில்வே கேட் பகுதி முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அந்த குழந்தையை  மீட்டெடுத்துள்ளனர்.

குழந்தை பிறந்து சில மணிநேரமேயானது என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். போலீசாரிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை பத்திரமாக சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருப்பதாகவும் இல்லை என்றால் விபரீதம் ஆகியிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் கடவுள் இருக்கிறார் அதனால் தான் குழந்தையை காப்பாறறியுள்ளார் என்று கூறினர்.

குழந்தையை முட்புதரில் கிடைப்பாறற்று தூக்கி போட்டு  சென்றது யார் என்பதை விசாரித்து வருகின்றனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.