காதலனின் மனைவிக்கு இளம் காதலியால் ஏற்பட்ட கொடூரம்! அமெரிக்காவை அதிர வைத்த இந்திய பெண்!

தன்னுடைய முன்னாள் காதலனின் மனைவியை கொல்ல முயன்ற இந்திய பெண் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ். இவருடைய வயது 32. இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மாகாணமான சிகாகோவில் வசித்து வருகிறார். லயோலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். அப்போது இவருக்கு அதே மருத்துவம் பயிலும் ஒரு இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.நெருக்கமானது அதன் பின்னர், காதலாக மாறியது. 2 மாதங்களிலேயே அந்த இளைஞர் டினாவை பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் டினா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். மேலும் ஆத்திரத்தில் இருந்த டினா தன் காதலரின் மனைவியை கொன்றுவிட்டால் காதலர் தன்னிடம் திரும்பி வருவார் என்று தப்புக் கணக்கு போட்டார். இருண்ட உலகத்தில் சென்ற அவர் ஒரு அடியாளை தேர்வு செய்தார். அவருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கி தன் காதல் மனைவியை கொன்று விடுமாறு கூறியுள்ளார். 

மேலும் இந்த கொலையானது தவறான நடத்தையின் போது நிகழ்ந்தவாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் காதலனுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் டினா கவனமாக இருந்தார். 

டினாவின் செயல்களை காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர். உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது டினா கொலை முயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கில் டினா கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.