கமல் - ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் அவ்வளவு தான்..! தூக்கி குப்பையில் போட தயாரிப்பாளர் லைக்கா திடீர் முடிவு..!

கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கை விடும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் எடுக்க திட்டமிடப்பட்டது. அதற்கான அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

கடந்த ஆண்டு முதல் பாதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் கமலுக்கு அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக தள்ளிப் போனது. அதன்பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சென்றுகொண்டிருக்கும்போது கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவி வருவதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இந்தியன்-2 திரைப்படத்தை கைவிடும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.