இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளை தெறிக்க விட்டு டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி!
45-2 என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி , தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்தது . மேற்கிந்திய தீவுகள் அணியின் ப்ரோக்ஸ் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார் . இந்திய அணியின் சமி மற்றும் ஜடேஜா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர் . இதனால் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .
முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்தது.மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்த ஹனுமா விஹாரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .