நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ரோமியோ ஹெலிகாப்டர்! சீனாவை தெறிக்கவிட, பாகிஸ்தானை பதறவிட மோடி அதிரடி!

எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டு எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.


அந்நிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் திட்டத்தின் கீழ், 24 என்ற எண்ணிக்கையிலான எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை, 17 ஆயிரத்து 832 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அமெரிக்கா வெளியுறவுத்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது. பெரும்பாலும் இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா விற்பனை செய்வது இல்லை.

ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர்களால், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து பின் தொடந்து தாக்க முடியும். மேலும், எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களில், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஹெல் ஃபைர் (Hellfire) ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே. 54 ரக நீர்மூழ்கி குண்டுகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும். 

இந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்க காரணம் சீனா தான். ஏனென்றால் தென் சீன கடல் பகுதி மட்டும் அல்லாமல் இந்தியப் பெருங்கடலிலும் சீனா போர்க் கப்பல்களை குவித்து வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையிலும் இந்த ஹெலிகாப்டரை இந்தியா கொள்முதல் செய்கிறது.

இதற்காக கடந்த ஓராண்டாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இறுதியில் மோடியின் அசத்தலான பேச்சுவார்த்தை மூலம் ஹெலிககாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை முகமை கூறியுள்ளது.