பதுங்கி பாய்ந்த இந்திய பவுலர்கள்! தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் விராட் கோலி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்துள்ளது.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்த போட்டியில் மூன்றாம் நாளான நாளை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் இந்த போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது. குறிப்பிடத்தக்கது.