சம்பாதிக்குற பணத்தை எல்லாம் என்ன செய்றீங்க? அதிகாலையில் இளம் நடிகை வீட்டுக்குள் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள்!

பிரபல கதாநாயகி ராஷ்மிகா மந்தனா வின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.


தெலுங்கு திரையுலகில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படத்திற்கு பிறகு பிறந்தநாள் விழாவில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால் இவருக்கு பட வாய்ப்பு அதிக அளவு கிடைத்தது. 

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த டியர் காம்ரேட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் தெலுங்கு திரை உலகில் ராஷ்மிகா மந்தனா பிஸியான தாலும் வேறு சில காரணங்களாலும் இவர்களின் திருமணம் கைவிடப்பட்டது.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள நடிகை ராஷ்மிகா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.