செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி பாராட்டு.!

இன்றைய செயற்குழுவுக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்தனர். வீர வாள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


10 மணிக்கு கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9.50 மணிக்கே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார் பன்னீர்செல்வம். அவரை வரவேற்க, பன்னீரின் முகமூடி அணிந்த தொண்டர்கள் ஏராளமாக குவிந்து நின்றனர்.

பன்னீர்செல்வம் அவ்வை சண்முகம் சாலையில் நுழைந்ததுமே, தொண்டர்கள் சூழ்ந்து மலர் தூவியும், பூ மாலை கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். " அம்மாவின் நிரந்தர அரசியல் வாரிசு ஓ.பி.எஸ் " என்றும் " அதிமுகவின் பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்" எனவும் கோஷங்கள் எழுப்பினர்..

மேலும், வெள்ளி வாள் அளித்து, கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புன்னகையுடன் அனைத்து வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார் பன்னீர்செல்வம். இதன் எதிரொலி செயற்குழுவிலும் எதிரொலித்தது என்கிறார்கள்.