கணவனைப் மணப்பெண்ணுக்கு மருதாணி பூசுவது இதற்குத்தானா? லட்சுமி கடாட்சம் கிடைக்குமாமேஇருக்க சீதையின் ஆசிர்வாதம் பெற்ற இந்த இலைகளைக் கையில் பூசிக்கொள்ளுங்க!

இந்து மத வழக்கின்படி மருதாணி விருந்து நிகழ்வு மணப்பெண் வீட்டிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும்.


திருமணத்திற்கு முந்திய இரவு அல்லது சில தினங்களுக்கு முன்னதாக நடைபெறலாம். ஒரு பெண்ணின் கையில் மருதாணி விரைவில் சிவந்து விட்டால் அவள் கணவன் அவள் மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர்கள் பெருமைப்படுவர்.

மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் தெய்வீக குணம் கொண்டதாகும். மருதாணி சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையின் விளையுகளாகவே விளங்குகிறது.

மருதாணியை அதிகமாகப் பயன்படுத்தும் கையினை குறிக்கும் சந்திரனின் நட்சத்திரமான ஹஸ்தம் கன்னியில் இருப்பதால் இதை காரக பாவமாக குறித்தார்கள். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் மருதாணி பரிகாரப் பொருளாகும்.

மருதாணி பெண்களின் சோகம் தீர்ப்பதால் அசோகம் என்ற பெயரும் உண்டு. சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோகவனம் என்ற பெயர் ஏற்பட்டது. சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம் – உன்னை பூஜிப்பவர்களுக்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு, உன் இலைகளைக் கையில் பூசிக் கொள்பவர்களுக்கு கணவனைப் பிரியும் துன்பம் வராது என்று சீதையால் ஆசீர்வதிக்கப்பட்டது.

கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக் கொள்ளும் பழக்கம் சீதையின் ஆசீர்வாதத்தால் ஏற்பட்டது. மகாலட்சுமியின் அருள் நிறைந்த மருதாணி இலைகளைக் கொண்டு மஹாலக்ஷ்மியை அர்ச்சித்தால் லக்ஷ்மி கடாக்ஷம் நிறையும் என்கிறது வேதம். ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலிப் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதாணியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும்.