விஜயகாந்தின் தற்போதைய உண்மை நிலை..! நேரில் பார்த்துவிட்டு வந்த கதறிய மனோபாலா! அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடிகர் விஜயகாந்தை தற்போது பார்ப்பதற்கு தன்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்று இயக்குனர் மனோபாலா கூறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தை பற்றி இயக்குநர் மனோபாலா கூறியிருப்பது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "இன்று சினிமாவில் பல இயக்குனர்கள் முன்னணியில் இருப்பதற்கு காரணம் விஜயகாந்த் தான். பல புதுமுக இயக்குனர்களுக்கு அந்தகாலத்தில் அவர் வாய்ப்பு வழங்கியதே இதற்கு காரணமாகும். தமிழ்நாட்டு மக்கள் மீது விஜயகாந்த் எவ்வளவு பிரியம் வைத்திருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். ஈழப்போர் இலங்கை நாட்டில் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

விஜயகாந்த் அதற்காக பெரிதும் கவலைப்பட்டார். 2 நாட்கள் கழித்து அவருடைய பிறந்த நாள் வந்தபோது, அதைக்கூட அவர் சரியாக கொண்டாடவில்லை. மேலும், அப்போது அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த சிலநாட்களில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவருடைய மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

விஜயகாந்தின் வீட்டிற்குள் ரசிகர்களோ, இயக்குனர்களோ உதவி இயக்குனர்களோ செல்கின்ற போது அவர்களுக்கு ஒரு முறை கூட சாப்பாடு போடுவதற்கு அவர் தவறியதில்லை. யார் வேண்டுமானாலும் நான் நிறைய பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறேன் என்று கூறலாம். ஆனால் லட்சக்கணக்கான பேருக்கு சாப்பாடு போட்டு மகிழ்ந்தவறாக விஜயகாந்த் மட்டுமே திகழ்வார்.

கட்சி ஆரம்பித்த பிறகு கூட அவருடைய பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியதில்லை. அரசியல் ரீதியில் நான் விஜயகாந்தை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். ஆனால் ஒருமுறை கூட தனிப்பட்ட முறையில் எதிர்த்து பேசியதில்லை.

ஆனால் தற்போது விஜயகாந்தின் நிலையை பார்ப்பதற்கு பரிதாபமாக உள்ளது. சமீபத்தில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சினிமாவில் நடித்ததற்காக பெருவிழா எடுக்கப்பட்டது. அப்போது நான், சத்யராஜ் உட்பட நிறைய பேர் சென்றிருந்தோம். அவர் அப்போது என்னை ஒரு குழந்தையை பார்ப்பது போன்று பார்த்தார். பின்னர் பிரேமலதாவிஜயகாந்த் அவரிடம் எங்களை பற்றி கூறியபோது அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்தன.

அந்த பிரம்மாண்ட கம்பீரமான குரலை கேட்க இயலாமல் தவித்து வரும் ரசிகர்களில் நானும் ஒருவன். எப்போது அவர் மீண்டும் பேசுவார் என்பது குறித்து காத்து கொண்டிருக்கிறேன்" என்று உணர்ச்சி வழிய மனோபாலா பேசியுள்ளார்.