எனக்கு கொரோனா இருக்கிறது..! அதை உலகம் முழுவதும் பரப்பப்போகிறேன்..! இளம் பெண் வெளியிட்ட வீடியோ! பின்னர் அரங்கேறிய திகில் சம்பவம்!

கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்புவதாக இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வேண்டுமென்று கொரோனா வைரஸை பரப்புவதாக 18 வயது இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவானது அந்நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் சேர்ந்த மராடியாகா என்ற இளம்பெண் ஃபேஸ்புக்கில் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், இதனை அந்நாட்டு முழுவதிலும் பரப்பபோவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோவானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியதால் டெக்சாஸ் நகர காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது மூன்றாம் நிலை குற்றவாளி என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம் மற்றும் தேசத்தின் நிலைக்கு அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது வழக்கறிஞர் உள்ளனரா என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.