நண்பர்களுடன் வெளிநாட்டில் லூட்டி..! முதல் முறையாக வெளியான விஜயின் புகைப்படம்..! எப்போது எடுத்தது? வெளியிட்டது யார் தெரியுமா?

இளைய தளபதி விஜய் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு பயணம் செய்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவருடைய ரசிகர் பட்டாளம் இவருக்காக உயிரை கொடுப்பதற்கும் தயங்கமாட்டார்கள். சமூகத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதனை சுட்டிக்காட்டுவதற்கும் அவர் தயங்க மாட்டார் என்பதற்காகவே ரசிகர்கள் இவரைப் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் உச்சகட்டத்தில் இருந்தபோதும் சரி, சற்று சரிவை சந்தித்த போதிலும் சரி தன்னுடைய சக வயது நண்பர்களுடன் வெளிநாடு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி 2014-ம் ஆண்டில் தன்னுடைய நண்பர்களுடன் அவர் வெளிநாடு  சென்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய்யின் உற்ற நண்பர்கள் ஒருவரான சஞ்சீவ் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்து "2014 நண்பர்களுடன் வெளிநாடு ட்ரிப்" என்று பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.