என் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது..! ஆனால் அம்மாவுடன் போகிறேன்..! காதலனை காப்பாற்ற காவல் நிலையத்தில் இளமதி செய்த செயல்!

பெற்றோரை எதிர்த்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இளமதி தற்போது கணவனுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருப்பதுடன் தனது தாயுடன் செல்ல உள்ளதாக காவல் நிலையத்தில் கூறிவிட்டு அவருடனேயே வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.


ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்தவர் தலித் சமுதாயத்தை சேர்ந்த செல்வன். பவானியை அடுத்த குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் இளமதி. இவர்கள் இருவரும் பவானியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த போது காதல் அரும்பியது. இளமதி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டில் தலித் இளைஞரை காதலிக்கு எதிர்ப்பு எழுந்தது.

இதனால் செல்வன் தனது பெரியார் திராவிடர் கழக தொடர்புகள் மூலம் திருமணம் செய்து கொண்டார். சேலம் கொளத்தூரில் வைத்து இளமதியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார் செல்வன். ஆனால் அன்றைய தினமே இளமதியின் தந்தை அங்கு சென்று தனது மகளை அழைத்துச் சென்றார்.

ஆனால் இளமதியை அவரது தந்தை கடத்திச் சென்றுவிட்டதாக செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் இளமதியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இளமதி எங்கு இருக்கிறார் என்பதில் மர்மம் நீடித்தது. இதற்கிடையே மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாய் மற்றும் வழக்கறிஞருடன் இளமதி வந்து சேர்ந்தார்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது தான் தாயுடன் செல்ல விரும்புவதாக இளமதி கூறியுள்ளார். மேலும் இளமதியை செல்வன் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக அவரது தாய் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது தனது காதலனை விட்டுக் கொடுக்க இளமதி மறுத்துவிட்டார்.

தனது விருப்பத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என்று தன்னை செல்வன் கடத்தவில்லை என்றும் இளமதி தெரிவித்தார். ஆனால் தற்போது செல்வனடன் செல்ல விரும்பவில்லை தான் தனது தாயுடன் இருக்க விரும்பவுதாக இளமதி தெரிவிக்கவே போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் வைத்து இளமதி தனக்கு கட்டாய திருமணம் நடைபெறவில்லை என்று கூறியுள்ளதால் செல்வனை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.

தனது பெற்றோருடன் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையிலும் கூட தனது காதலனை பிரச்சனையில் சிக்க வைக்காமல் வாக்குமூலம் அளித்துச் சென்றுள்ளார் இளமதி.