வெயிட் பண்ணுங்க வந்துடுறேன்! 26வது மாடியில் இருந்து குதித்த ஐடி என்ஜினியர்! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஆட்டோ டிரைவர்!

குடும்பங்கள் உறவுகள் கண்டுகொள்ளாததால் இருபத்தி ஆறாவது மாடியில் இருந்து ஐடி ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் பொறியியல் இளங்கலை பட்டம் முடித்த ஈஸ்வர ராவ் என்பவர் அதே மாநிலத்தில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் நீண்ட நாள்களாக அதிகமான மன சோர்வை உணர்ந்த ஈஸ்வர ராவ் சென்னை வந்து திருவான்மியூர் நியூ பீச் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் பகுதிக்கு ஆட்டோ மூலம் சென்றுள்ளார்.

பின் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஆவின் பால் கம்பெனிக்கு எதிரே இருக்கக்கூடிய 26 அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சென்று விட்டு உடனே திரும்பி வந்து விடுவதாகவும் அது வரை காத்திருக்குமாறு ஆட்டோ சாரதி இடம் கூறியிருந்தார். பின் நீண்டநேரமாகியும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவர் வெளியே வரவில்லை.

இந்நிலையில் 26 வது மாடிக்குச் சென்ற ஈஸ்வர ராவ் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை கண்டவர்கள் உடனடியாக 108க்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சென்றதும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், அவருக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்ததாலும், சொந்தங்கள் நண்பர்கள் யாரும் அவரை கண்டு கொள்ளாததால் தனிமையில் புலம்பிதவித்த அவர் மன சோர்வு அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது முதற்கட்ட விசாரணை என்பதால் தற்கொலை குறித்து வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.