வான்கடேவில் கெத்து காட்டப்போவது யார்? : MI vs CSK மோதும் பரபரப்பான போட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் , 7வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில்  உள்ளது. ipl போட்டிகளில் பலம் பொருந்திய அணிகளாக கருதப்படுபவை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த இரு அணிகளும் அனைத்து சீசன்களிலும் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதும் போட்டி என்றல் அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கும்.

இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளதால் மும்பை அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். எனினும் சென்னை அணி நல்ல பார்மில் உள்ளதால் மும்பை அணிக்கு இந்த போட்டி சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.