இந்த போட்டியிலாவது ஜெயிக்குமா? சன் ரைசர்ஸுடன் மோதும் RCB!

இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.


மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இது வரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனை அந்த அணி இந்த போட்டியில் வென்றே ஆக  வேண்டிய முனைப்புடன் உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. IPL போட்டிகளில் பலமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதஉள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது வரை நடந்த 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இது வரை பங்குபெற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.