ஐபிஎல் துவக்க விழா ரத்து!

ஐபிஎல் 2019ன் துவக்க விழா ரத்து செய்யப்படுகிறது என்று பிசிசிஐ நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் தொடக்க போட்டிக்கு முன்பாக கண்களை கவரும் வகையில் பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெரும் துவக்க விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த சீசனின் ஐபிஎல் துவக்க விழா ரத்து செய்யப்படுகிறது.

 மேலும் இந்த துவக்க விழாவிற்கு ஏற்படும் செலவை புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தீவிரவாத தொடர்புடைய நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்க்கும் வகையில் ஐசிசி யை வலியுறுத்தி பிசிசிஐ கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று பிசிசிஐ கு பல வகைகளிலும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. லீக் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் பாக்கிஸ்தான் அணிக்கு 2 புள்ளிகள் சுலபமாக கிடைத்து விடும். 

ஒரு வேலை காலிறுதி அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இந்திய அணி விளையாடி தானே ஆக வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இதை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியமும்,மத்திய அரசும் தான் முடிவெடுக்க வேண்டும்.