திருச்சி ரயில்வே நிலையத்தில் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 180 லி வரை தண்ணீர் அரியவகை கண்டுபிடிப்பு மூலம் பாராட்டுகளை பெறும் ஐ.ஐ.டி மாணவர்கள்...
காற்றை தண்ணீராக்கும் எந்திரம்! திருச்சி ரயில் நிலையத்தில் சூப்பர் கண்டுபிடிப்பு!
திருச்சி ரயில்வே நிலையத்தில் பிரபல ஐ. டி நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடன், கூறையின் மேற்பகுதியில் முதற்கட்டமாக மின் தகடுகளை பொறுத்தி, இன்னர் அதன் உதவியுடன் காற்றில் இருக்கும் ஈரபத்தத்தை உறிந்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கும் இயந்திரம் அமைக்கபட்டுள்ளது.
அதில், ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 6-7 லிட்டர் வரையும் நாள் ஒன்றுக்கு 180 லிட்டர் வரையும் தண்ணீர் உறிஞ்சு உற்பத்தி செய்யபடுகிறது.இதன் மூலம் அங்கு வரும் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் தண்ணீர் சுவை மிக அருமையாக இருப்பதாகவும் குழந்தைகள் வரை உபயோகப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்க்காக பலத்தர்ப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. எங்குன்பார்க்கினும் மக்கள் காலி குடங்களுடன் வீதியில் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டு பிடிப்பு பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது