இந்த ஆண்டிற்கான சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ICC விருதுகள்! ஒட்டு மொத்தமாக அள்ளிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என அணைத்து வகையிலும் சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஏற்கனவே 3 சர்வதேச விருதுகளை பெற்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு மேலும் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சிறந்த வீரருக்கான விருதும், சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட வீரருக்கான விருதும் அவருக்கு அளிக்கப்படவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி
இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் - சதீஸ்வர் புஜாரா
இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டீ 20 பேட்ஸ்மேன் - ஆரோன் பின்ச்
ஆண்டின் செயல்திறன் மிக்க வீரர் - குலதீப் யாதவ்
சிறந்த சர்வதேச T20 பவுலர் - ரஷீத் கான்
வாழ்நாள் சாதனையாளர் விருது - மொஹீந்தர் அமர்நாத்
ஆண்டின் சிறந்த சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் - ஸ்ம்ரி மந்தானா
ஆண்டின் சிறந்த இளம் வீரருக்கான விருது - யஸ்யாஷி ஜெய்ஸ்வால்
கிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி விருது - மறைந்த அஜித் வடேகர்
இவ்வாறு கிட்ட தட்ட அணைத்து விருதுகளையும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.