ஐசிசி ஹாட்ரிக் விருது பெற்று வரலாறு படைத்த கோஹ்லி!

ஐசிசி 2018ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை அறிவித்துள்ளது.


 இந்த பட்டியலில் விராட் கோஹ்லி 3 முக்கிய விருதுகளை பெற்று ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார். ஒரே ஆண்டில் இந்த மூன்று முக்கிய விருதுகளை பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோஹ்லி செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் விவரம் : 1.   சி சி சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் , 2. சி சி சிறந்த டெஸ்ட் போட்டிக்கான வீரர் , 3. சி சி 2018 வருடத்தின் சிறந்த வீரர் என்ற மூன்று முக்கிய விருதுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ஐசிசி ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த அணியை அறிவித்துள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் விராட் கோஹ்லி கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மொத்தமாக இவர் 2735 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்களும் 9 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் 6 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 5 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு கோஹ்லிக்கு பேட்டிங்கிலும் , அணித்தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோஹ்லி சிறப்பாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது