பிரியா வாரியருக்கு செம டஃப் பைட்! வைரலாகும் ஐபிஎஸ் அதிகாரி வீடியோ!

பிரியா வாரியர் கண்னை சிமிட்டிய வீடியோவிற்கு இணையாக ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற டினா டபி கான் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


டினா டபி கான் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவராவார். இவர் தன்னைப்பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டிருப்பவராவார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரியங்கா வாரியர் கண்ணடித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகியிருந்தது. அவரை போன்றே இவரும் கண் சிமிட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர், கைகளில் அழகாக மெஹந்தி வைத்துக்கொண்டும் கண்னை சிமிட்டியும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.instagram.com/dabi_tina/?hl=en