என்னை மன்னித்துவிடு! உன் மனைவியை கொன்று புதைத்துவிட்டேன்! கணவனுக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பிய பகீர் மாற்றுத்திறனாளி!

மாற்றுத்திறனாளி ஒருவர் கள்ளக்காதலியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அவரைக் கொன்றுவிட்டு அவரது கணவருக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பிய அதிர்ச்சிகர சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த பொன்னைப்பட்டி கிராமத்தில் பெருமாள் – பாண்டிச்செல்வி தம்பதி வாழ்ந்து வந்தனர்.

குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாகவும் 2 குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்பதற்காகவும் பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். 

இதற்கிடையே பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரான மாற்றுத்திறனாளி ரெங்கையா என்பவர் பாண்டிச்செல்வியுடன் பழக ஆரம்பித்துள்ளார். பாண்டிச்செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஏற்கனவே திருமணம் ஆன ரெங்கையா பாண்டிச்செல்வியுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்துள்ளார்.

இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நூறு நாள் திட்ட வேலைக்கு செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லிவிட்டு உல்லாசமாக இருப்பதற்காக ரங்கையா வீட்டிற்கு சென்ற பாண்டிச்செல்வி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சோலை முத்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையிலான போலீஸ் பாண்டிச்செல்வியை தேடிவந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பெருமாளுக்கு வாட்சப்பில் ரெங்கையா மெசேஜ் ஒன்றில் அனுப்பியுள்ளார். அதில் நான் உங்கள் மனைவியை கொன்று புதைத்து விட்டதாகவும் என்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் தன்னுடைய உறவினர்களுக்கு அளித்த தகவலின் கொடுக்கப்பட்டு பின்னர் போலீசார் ரங்கையாவை கைது செய்தனர்.

பாண்டிச்செல்விக்கும் தனக்கும் பிரச்சனை வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் வாழைக்குறிச்சியில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் புதைத்து விட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பொன்னமராவதி வட்டாட்சியர் முன்னிலையில் பாண்டிச்செல்வியின் உடலை தோண்டி எடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவியை இழந்த சோகத்தில் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு வந்த பெருமாள் அவரது உருவப்படத்தை பார்த்து கதறி அழுதார்.

திருமணம் என்பதே ஆணுக்காக பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் ஒட்டி உறவாடி வாழவேண்டும் என்பதற்காகத்தான். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் கல்யாணம் ஆன பிறகு மனைவியையும் அழைத்து சென்று அங்கேயே வாழலாம்.

அல்லது போதிய பணம் வெளிநாட்டில் சம்பாதித்த பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம். இதற்கு இரண்டு கெட்டானாக கல்யாணம் ஆன 3 மாதத்தில் மனைவியை பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விட்டுச் செல்லும்போது இதுபோன்ற காளான்கள் முளைத்து குடும்பத்தை சீரழித்து விடுகிறது.

நம்மை நன்றாக வாழ வைக்கத்தான் பல அவமானங்களுக்கு இடையில் ஓய்வில்லாமல் கணவர் வெளிநாட்டில் உழைக்கிறார் என்பதை கொஞ்சம் மனதில் வைத்தால் மனைவிகளும் இதுபோன்று சபலமடைய வாய்ப்பு இருக்காது.