சாயங்காலத்துக்குள்ள வரணும்..! இல்லனா? மிரட்டுறானுங்க! சிக்க கூடாத இடத்தில் சிக்கிய குடும்ப பெண்கள்! ஆனால்??

2 பெண்களை கந்துவட்டிக்காரர்கள் கடுமையாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


களக்காடு அருகே சிதம்பராபுரம் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த வசந்தா, ஜானகி அது இரண்டு பெண்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இப்பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் புகழ்சேட் ஆகியோர் சகோதரர்களாவர். இருவரும் ஒரு சோடா கம்பெனியை நடத்தி வந்தனர்.

கம்பெனியை பெரிதளவில் உருவாக்குவதற்காக வசந்தா மற்றும் ஜானகி ஆகியோரிடம் இருந்து 2,20,000 ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்தவாறு சோடா நிறுவனம் முன்னேறவில்லை. தலைகீழாக நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது. 4 பேரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். 

தங்களிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்து இதுவரை கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் வரை வட்டியை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களால் நினைத்தவாறு அசல் பணத்தை செலுத்த இயலவில்லை. அசலை கேட்டு 2 பெண்களும் இவர்களை மிரட்டி வந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி களக்காடு காவல்துறையினரிடம் இவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்தவித பயனும் இல்லை. இதன் நடுவில் இன்று கடற்கரைப்பகுதியில் மாவட்ட கலெக்டர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது.

காவல்துறையினர் பாதுகாப்பையும் மீறி சகோதரர்கள் இருவருடைய மனைவிகள் கலெக்டர் அலுவலகத்தின் போர்டிக்கோவுக்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்துக்கொண்டனர்.  காவல்துறையினர் நிகழ்ந்தவற்றை கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவமறிந்த கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அவர்களைப் பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். பின்னரே 2 பெண்களும் ஓரளவு நிம்மதி அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது குறைதீர்க்கும் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.