2வது முறை கர்ப்பமான 2வது மனைவி! கருவை கலைக்கச் சொன்ன கணவன்! ஆத்திரத்தில் சூரிய கலா செய்த படுபாதக செயல்!

கணவரின் முதல் தாரத்திற்கு பிறந்த மகளை இளம் பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் தாம்பரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள சேலையூரில் பார்த்திபன் என்ற 31 வயது இளைஞன் வசித்து வருகிறார். விவரிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. 6 வயது மதிக்கத்தக்க ராகவி என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனின் மனைவி இறந்து போயுள்ளார்.

சில மாதங்கள் கழித்து அதே பகுதியை சேர்ந்த சூரியகலா என்ற பெண்ணை பார்த்திபன் மணந்துள்ளார். சூரிய கலாவும் ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்கும் 2 குழந்தைகளையும் சந்தோஷமாக பார்த்துக்கொள்ளலாம் என்று பார்த்திபன் கூறியதற்கு சூரியகலா சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சூரியகலா திடீரென்று கர்ப்பமான போது, அந்த கருவை கலைக்குமாறு பார்த்திபன் சூரியகலாவிடம் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரியகலா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ராகவியை கடுமையாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை திடீரென்று காணவில்லை என்று சூரியகலா பார்த்திபனிடம் கூறியுள்ளார். பதறி அடித்துக்கொண்டு பார்த்திபன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அப்போதும் ராகவே கிடைக்கவில்லை. பின்னர் வீட்டிற்கு பின்னாலிருந்த முட்புதரில் தேடிப்பார்த்தபோது ராகவி சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராகவியின் 2-ஆம் தாய் ஆனதால் சூரியகலாவிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். தொடக்கத்தில் மழுப்பிய சூரியகலா, ஒரு கட்டத்தில் தானே ராகவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

காவல்துறையினர் அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்று அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.