முதலிரவு அறைக்குள் கடப்பாறை! மணப்பெண் உடம்பெல்லாம் ரத்தம்! மணமகன் சடலமாக தொங்கிய பகீர்! திருமணத்தன்று திருவள்ளூர் திகில்!

முதலிரவு அறைக்கு சென்ற மணமகள் கொலை செய்யப்பட்டதோடு , மணமகனும் தூக்கில் தொங்கிய சம்பவம் திருவள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் காட்டூருக்கு அருகேயுள்ள சோமஞ்சேரியை சேர்ந்தவர் நீதிவாசன். இவருக்கும் சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. வழக்கம்போல இருவருக்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். நீதிவாசன் மற்றும் சந்தியா இருவரும் மகிழ்ச்சியோடு முதலிரவு அறைக்கு சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவைத் தட்டி பார்த்துள்ளனர். எந்த பதிலும் வராத காரணத்தினால் வேறு வழியின்றி கதவை உடைத்து உள்ளனர். அப்போது அங்கிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

முதலிரவு அறையில் மணப்பெண் ரத்தவெள்ளத்தில் இருந்ததை கண்ட அங்கு இருந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையில் மணமகன் நீதிவாசனும் இல்லை. இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் இருந்த சந்தியாவை மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்றனர். சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் காட்டூர் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதலிரவு அறைக்கு உள்ளே சென்ற மணமகன் நீதி வாசன் அங்கு இல்லாததால் அவர் எங்கே என்று உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரது வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளியில் இருந்த வேப்ப மரத்தில் தனது வேஷ்டியின் மூலமாக அவர் தூக்கு மாட்டி சடலமாக இருந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மணமகன் நீதிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின் படி முதலிரவு அறையில் கடப்பாரையில் ரத்தக்கரை இறந்ததால் மணமகள் சந்தியா கடப்பாறையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக முதலிரவு அறைக்குள் சென்ற நீதிவாசன் மற்றும் சந்தியாவுக்கு இடையே ஏதாவது சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

சந்தியா கொலை செய்யப்பட்ட பிறகுதான் வீட்டிற்கு அருகே உள்ள வயல்வெளியில் உள்ள வேப்பமரத்தில் மணமகன் நீதி வாசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலிரவு அறையில் சந்தியா அடித்துக்கொலை செய்யப்பட்ட போது எந்த சத்தமும் கேட்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். அதுதொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.