மனைவி குழந்தை பெற்றெடுத்த மறுநாள் சடலமாக வீட்டிற்கு வந்த கணவன்..! வீல் சேரில் சென்று மனைவி செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

வெளிநாட்டிலிருந்து தன்னுடைய கர்ப்பிணி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பிய கணவர் அடுத்த மாதத்திலேயே உயிரிழந்த சம்பவமானது துபாயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பரா என்ற இடத்தை சேர்ந்தவர் நிதின். நிதினின் வயது 29. இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆதிரா என்ற மனைவியுள்ளார். ஆதிராவும் ஒரு பிரபல தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் துபாயில் பணியாற்றி வந்தார்.

கேரளாவில் ரத்த தானம் செய்பவர்களின் துபாய் அங்கத்தின் செயலாளராகவும், இந்திய கலாச்சாரம் மற்றும் கலை சங்கத்தின் மிக முக்கிய உறுப்பினராகவும் நிதின் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆதிரா கர்ப்பமாகியுள்ளார். ஆதிராவை பத்திரமாக கேரளாவுக்கு அனுப்பி வைப்பதற்கு நிதின் முயற்சி எடுத்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அப்போது அரசாங்கம் வெளிநாட்டினரை இந்தியா அழைத்து வர திட்டமில்லை என்று நீதிமன்றத்தில் பதிலளித்தது. அதன்பிறகுதான் மே மாத தொடக்கத்தில் "வந்தே பாரத் மிஷன்" என்ற பெயரில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு வரவழைத்தது.

அவ்வகையில் நிதின் ஆதிராவை பத்திரமாக துபாயில் இருந்து கேரளாவுக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த சில வாரங்களிலேயே நிதின் உடல்நிலை மிகவும் மோசமானது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறுகளால் நிதின் பெரிதும் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிதின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி குறித்து துபாய் இந்திய துணைத் தூதர் கூறுகையில், " நிதின் இறந்ததை எங்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். கொரோனா காலத்தில் தன்னார்வலராக திறம்பட செயல்பட்டார். அவர் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

தன்னுடைய மனைவியை விமான நிலையத்தில் கொண்டு விடும் போது இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இருவருக்குமே பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு இருதயம் சார்ந்த கோளாறுகள் இருந்ததாகவும், அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியாற்றியதால் உடல்நிலை மோசமானது என்று அவருடைய நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆதிராவுக்கு நிதின் இறந்த செய்தியை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. தான் பலமுறை செல்போனில் அழைப்பு விடுத்தும் ஏன் நிதின் செல்போனை எடுக்கவில்லை என்று ஆதிரா யோசித்து கொண்டிருந்தார்‌. பின்னர் ஒரு வழியாக வெற்றிகரமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பிறகுதான் நிதின் உயிரிழந்ததை ஆதிராவுக்கு உறவினர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய கணவரின் மரண செய்தியை கேட்ட ஆதிரா பேரதிர்ச்சி அடைந்தார். அத்துடன் அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானால் சர்க்கரை நாற்காலியை நகர்ந்து வந்தார். நிதின் உடலானது சிறப்பு விமானம் மூலம் நேற்று கேரளா வரவழைக்கப்பட்டது. 

உடலை மருத்துவமனையில் பார்த்த ஆதிரா கதறி அழுது சம்பவமானது அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தை தனக்கு பிறந்த முதல் குழந்தையை கூட காண இயலாமல் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.