ஒரே வீட்டில் தனித்தனி குடித்தனம்! இரவில் மனைவியின் அந்தரங்க ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்! பிறகு அரங்கேறிய பயங்கரம்! நாமக்கல் பரபரப்பு!

கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 48. இவருடைய மனைவியின் பெயர் கௌசல்யா. கௌசல்யாவின் வயது 38. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  துரதிஷ்டவசமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1.5 வருடங்களாக இருவரும் தனியாக வசித்துவந்தனர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் கௌசல்யாவின் வீட்டிற்கு மோகன் சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கிடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அப்போது ஆத்திரமடைந்த மோகன் கௌசல்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். தடியாலும், இரும்பு கம்பியாலும் மனைவியை மோகன் பலமாக அடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கௌசல்யா பலியானார்.

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கௌசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மோகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளார். "மாமனாரின் சொத்தை விற்றதில் 50 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதிலிருந்து என் மனைவி என்னை மதிக்கவில்லை. மேலும் எங்கள் குடும்ப உறவினர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தன. மேலும் அந்த நபருக்கு என் மனைவிக்கு பண உதவியையும் செய்துள்ளார்‌. இதனால் ஆத்திரமடைந்த நான் என் மனைவியை அடித்துக்கொன்றேன்" என்று வாக்குமூலம் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் தங்கவேலு என்பவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.