நள்ளிரவு! 50 வயதை கடந்த மனைவி செய்த மோசமான செயல்! அவமானத்தில் கணவன் எடுத்த பகீர் முடிவு! தூத்துக்குடி சம்பவம்!

தூத்துக்குடியில் சொந்த வீட்டிலேயே மனைவி 100 பவுன் நகையை கொள்ளையடித்து நாடகமாடிய சம்பவத்தை அடுத்து கணவர் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய செல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட் . இவருக்கு வயது 59. இவருடைய மனைவி பெயர் ஜான்சி. இவருடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்த பின்பு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

வின்சென்ட் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் தனியாக அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் திடீரென்று இவர்களது வீட்டில் நுழைந்து வீட்டில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 20,000ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். 

இதனைஅடுத்து வின்சென்ட் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின்போது வின்சென்ட் அவர்களின் மனைவி ஜான்சி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது ஜான்சி சீட்டு நடத்தி வந்ததில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக வீட்டில் இருந்து தன் கணவருக்கு தெரியாமல் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்க ஜான்சி முடிவு செய்திருக்கிறார்.

இதனையடுத்து சம்பவ தினத்தன்று ஜான்சி தன்னுடைய கணவருக்கு நிலவேம்பு கசாயத்தில் தூக்க மாத்திரை போட்டு கொடுத்திருக்கிறார். அதனை குடித்த வின்சென்ட் மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டி புதைத்து இருக்கிறார்.

இந்த தகவலை ஜான்சி தன்னுடைய வாக்கு மூலத்தில் அளித்திருக்கிறார். ஜான்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த ஜான்சி தனது வீட்டில் கணவருடன் இருந்திருக்கிறார் .

ஏற்கனவே உடல் நலம் பாதித்து இருந்த வின்சன்ட் தன் மனைவி செய்த செயலால் மனதளவில் மிகப் பெரிய காயத்தை அடைந்திருக்கிறார்.

 இந்தநிலையில் வீட்டில் நடந்த சம்பவத்தை மறக்க முடியாத வின்சென்ட் இன்று அதிகாலை தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டின் மற்றொரு அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஜான்சி காலையில் எழுந்து பார்த்த பொழுது தன் கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து வந்த தாளமுத்து நகர் போலீசார் வின்சென்ட் உடலை கைப்பற்றி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்தபோது மனைவியே தன்னுடைய சொந்த வீட்டில் நகையையும் பணத்தையும் திருடி நாடகமாடிய சம்பவத்தால் வின்சன்ட் அவமானம் தாங்காமல் தற்கொலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. 

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.